Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“என்னால் இனிமேல் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் சொன்னார்கள்… ஆனால்?”- தங்கலான் ஆடியோ வெளியீட்டில் விக்ரம்!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:03 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று நடந்த இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விழாவில் பேசிய படத்தின் நாயகன் சினிமாவில் தான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ஐஐடியில் ஒரு நாடகத்தில் நடித்தேன். அதற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தார்கள். ஆனால் அன்றே நான் ஒரு விபத்தில் சிக்கினேன். எனக்கு 23 அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். கால் முறிந்ததால் என்னால் இனிமேல் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஆனால் நான் என் அம்மாவிடம் மீண்டும் நடப்பேன், நான் சினிமாவில் நடிப்பேன் என சொல்லிக் கொண்டே இருந்தேன். ஊன்றுகோல் உதவியோடு நடந்து கொண்டிருந்த நான் முதலில் அவற்றைத் தூக்கியெறிந்து நடக்க ஆரம்பித்து வேலைக்கு சென்றேன். சினிமா வாய்ப்புகள் வந்தபோதும் எந்தபடமும் ஓடவில்லை. அப்படியே ஒரு பத்து வருடம் வீணானது. என் நண்பர்கள் எல்லாம் என்னை சினிமாவை விட்டுவிட்டு வெளியே வர சொன்னார்கள். நான் நடிகனாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால்தான் இன்று உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், இப்போதும் வாய்ப்பு தேடிக்கொண்டுதான் இருந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments