Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சியான் விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட்.... ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (17:00 IST)
விக்ரம் பல கெட் அப்களில் நடிக்கும் கோப்ரா படத்தினை தீபாவளிக்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதேசமயம் முக்கிய அப்டேட்டாக அடுத்த வாரம் இப்படத்தின் பாடல் ஒன்று   வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்டதும் ரஷ்யாவுக்கு சென்று இறுதிகட்ட படப்பிடிப்பை முடிக்க இருக்கிறது கோப்ரா படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான தும்பி துள்ளல் பாடலை ஏ ஆர் ரஹ்மான் ஜூன் மாதம் வெளியிட்டார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியாவது படப்பிடிப்பை தீபாவளிக்குள் முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளதாம் கோப்ரா படக்குழு. நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறும் விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.

இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கு இப்படத்தின் பாடல்களில் ஒன்று அடுத்த வாரம் வெளியாக உள்ளது. பாடலாசிரிய தாமரை எழுதியுள்ள ஒரு மனம் என்ற பாடலை  கார்த்திக் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments