Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் & லோகேஷின் ‘விக்ரம்’ ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (09:02 IST)
விக்ரம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆன நிலையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

இதையடுத்து தற்போது ஓடிடியிலும் படம் வெளியாகியுள்ள பல திரையுலக பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படம் முதல் வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான ராஜகமல் பிலிம்ஸ் ட்வீட் செய்து அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments