Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் ஆகும் விக்ரம்மின் இரண்டு படங்கள்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (10:35 IST)
விக்ரம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து பணிகளை முடித்து மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது மே மாதம 19 ஆம் தேதி துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம்மின் மற்றொரு படமான பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அடுத்த 20 நாட்களுக்குள் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments