Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்துக்கு அஜீத்தின் பரிந்துரை - விஜய் மில்டன் நெகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (10:28 IST)
விக்ரம் நடிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தில் கார் ரேஸ் காட்சி ஒன்று வருகிறது. அதனை சிறப்பாக எடுக்க கார் ரேஸ் வீரர் ஒருவரின் அனுபவ அறிவு படத்தை இயக்கும் விஜய் மில்டனுக்கு தேவைப்பட்டுள்ளது. அந்த ஆக்ஷன் காட்சியை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞரான லீ விடேகர்.
 
இவர் அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கும் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்திருந்தார். அஜீத் கார் ரேஸ் வீரர் என்பதால் அவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்று லீ விடேகர் கூறியிருக்கிறார். உடனடியாக அஜீத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
 
என்னைவிட ஃபார்முலா ஒன் கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் உங்களுக்கு பயனுள்ளவராக இருப்பார். எனக்கு அவர் நண்பர்தான், நான் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
 
அதனைத் தொடர்ந்து நரேன் கார்த்திகேயனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அஜீத் பரிந்துரைத்ததால் உடனடியாக படப்பிடிப்பு நடந்த கோயம்புத்தூருக்கு நேரடியாக வந்தவர் நிறைய பயனுள்ள டிப்ஸ்களை தந்திருக்கிறார்.
 
அஜீத் சொன்னதால்தான் இது நடந்தது என்றார் விஜய் மில்டன் நெகிழ்ச்சியுடன்.
 
இந்தப் படத்தில் நரேன் கார்த்திகேயன் நடிப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனை விஜய் மில்டன் மறுத்தார். அவர் படத்தில் நடிக்கவில்லை என்றார் விஜய் மில்டன்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments