Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனை மிஞ்சும் விக்ரம்: ஒரே படத்தில் 25 கெட்டப்புகள்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (23:01 IST)
தமிழ்த்திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்த 'நவராத்திரி' திரைப்படம் தான் ஒரு நடிகர் அதிக கேரக்டர்களில் நடித்த படமாக இருந்தது. இந்த சாதனையை கமல்ஹாசன் தனது 'தசாவதாரம்' படத்தில் முறியடித்தார். அவர் இந்த படத்தில் பத்து வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார்
 
இந்த நிலையில் கமல்ஹாசன் சாதனையை மிஞ்சும் வகையில் நடிகர் விக்ரம் தனது அடுத்த படத்தில் 25 கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள ஒரு த்ரில் படத்தில் விக்ரமுக்கு 25 கெட்டப்புகள் இருப்பதாகவும், அனைத்து கெட்டப்புகளிலும் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் தோற்றமளிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டால் உலக சினிமாவில் இதுவொரு சாதனையாக பதிவு செய்யப்படும். அதுமட்டுமின்றி இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது
 
விக்ரமின் விதவிதமான 25 கெட்டப்புகளுக்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தில் மேக்கப்பிற்கு என்றே ஒரு பெரிய தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments