Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதை உறுதி செய்த படக்குழு!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:12 IST)
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் சிம்பு குரலில் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த பாடலில் பாடியது மட்டும் இல்லாமல் சிம்பு நடித்தும் இருந்தார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு மொழி நடிகர்கள் நடித்து வரும் நிலையில் எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதைப்பற்றி படக்குழு எதையும் அறிவிக்காமல் ரகசியமாக காத்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில் எஸ் ஜே சூர்யாவும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் எஸ் ஜே சூர்யா வாரிசு திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments