Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தின் ஷூட்டிங் மட்டுமில்லை… இன்னொரு வேலையும் நடக்குதாம்.. 50 சதவீதம் முடிந்த போஸ்ட் புரொடக்‌ஷன்!

vinoth
சனி, 11 மே 2024 (14:34 IST)
அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்று வந்தது படக்குழு.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது.

ஆனால் பின்னர் அந்த முடிவில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் பின் வாங்கியது. தயாரிப்பாளருக்கும் சன் தொலைக்காட்சிக்கும் பேரம் படியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஜி தொலைக்காட்சி கோட் படத்தை வாங்கியுள்ளது.

கோட் திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக தற்போது படக்குழு துபாய் கிளம்பி சென்றுள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். இதுவரை படத்தின் டப்பிங் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments