Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பல் பாடல்கள் வெளியீட்டு விழா - விஜய்யின் நண்பேன்டா பேச்சு

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (09:03 IST)
ஷங்கரின் அசிஸ்டெண்ட் கார்த்திக் க்ரிஷ் இயக்கியிருக்கும் கப்பல் படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. அதனால் சென்னையில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் மேடை கொள்ளாத திரை பிரபலங்கள். விஜய், விக்ரம், ரஹ்மான், ஷங்கர்...
விழாவில் பேசிய விஜய்,
 
இயக்குனர் ஷங்கர் ஒரு படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றால், அந்தப் படத்துக்கு அதற்கு மேல் எதுவும் தேவையில்லை. ஷங்கர் சார் உள்ளே வந்தவுடனேயே கப்பல் படம் வெற்றியடைந்துவிட்டது. இயக்குனர் ஷங்கர் என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவர் என்பது மட்டுமின்றி அவரை என்னுடைய குருவாக கருதுகிறேன். நண்பன் படத்தின் போது அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.
 
விக்ரமை பற்றியும் சிறப்பாக குறிப்பிட்டுப் பேசினார் விஜய்.
 
நீண்ட நாள் கழித்து எனது நண்பர் விக்ரமுடன் மேடையில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. யாராவது என்னிடம் திரையுலகில் உங்கள் நண்பர் யார் என்று கேட்டால் உடனே கென்னி என்றுதான் சொல்வேன் (கென்னி விக்ரமின் பெயர்). அவருடனான நட்பு சினிமாவை தாண்டியது. அவரது குடும்பம் எங்களது வீட்டிற்கு வருவதும் எங்கள் குடும்பம் அவரது வீட்டிற்கு செல்வதுமாக எங்கள் நட்பு குடும்பம்வரை நீடிக்கிறது என்றார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments