Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி கமல் வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2017 (18:27 IST)
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனது யதார்த்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். எந்த காதாபாத்திரமாக இருந்தாலும் சவாலாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடித்து வருகிறார். பெரும்பாலும் நல்ல கதையுடன் வரும் இளம் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
 
தற்போது புதுமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் கவுதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
 
இந்த படத்தில் பழங்குடியினர் குழு தலைவராக நடிக்கும் விஜய் சேதுபதி, 8 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல், விக்ரம் வரிசையில் விஜய் சேதுபதியும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியலுக்கு வந்தால் சுதந்திரம் பறிபோய்விடும்… பிரபல நடிகர் சோனு சூட் கருத்து!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் உருவான சிக்கல்!

ஜெயிலர் 2 படத்தில் இணையும் கே ஜி எஃப் பிரபலம்!

ஜெயிலர் 2 வுக்குப் பிறகு பேன் இந்தியா நடிகரோடு இணையும் நெல்சன்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments