Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரத்திற்காக என் மீது வழக்கு போடுறாங்க! – நடிகர் விஜய்சேதுபதி!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (13:04 IST)
நடிகர் விஜய் சேதுபதி தன் மீது விளம்பரத்திற்காக மகா காந்தி வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல காலமாக ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் பிரபலமான ஹீரோவாக உருவானவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதுதவிர மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தமிழில் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது சென்னை நீதிமன்றத்தில் மகா காந்தி என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத அவர் இழிவுப்படுத்தி தவறான வார்த்தைகளால் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விஜய்சேதுபதி தரப்பிலும் மகாகாந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விஜய் சேதுபதி, விளம்பரத்திற்காக மகா காந்தி தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதிகபடியான அபராதத்துடன் இந்த வழக்கை ரத்து செய்யுமாறும் கூறியுள்ளார். இந்த வழக்கை ஜனவரி 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments