Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்துள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தில் ஒரு சிறிய மாற்றமாக படத்தின் தலைப்பு அனபெல் சேதுபதி என்று மாற்றப்பட்டுள்ளதாம். அதுபோலவே படத்தில் விஜய் சேதுபதியின் பெயரும் வீர சுப்ரமண்யம் என்பதற்கு பதிலாக வீர சேதுபதி எனவும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய விவரம் இப்போது வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை அன்று ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதத்தில் விஜய் சேதுபதியின் நிறைய படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments