Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முறையாக கார்த்தியோடு இணைந்து நடிக்கவுள்ள விஜய் சேதுபதி!

முதல் முறையாக கார்த்தியோடு இணைந்து நடிக்கவுள்ள விஜய் சேதுபதி!
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:25 IST)
இயக்குனர் ராஜுமுருகன் இயக்க உள்ள புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இப்போது ராஜு முருகன் ஈடுபட்டு வருகிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ராஜுமுருகன், இயக்குனர் பாலாவின் படம் மற்றும் தளபதி 66 ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிவருகிறார். இதை முடித்த பின்னர் கார்த்தி நடிக்கும் படத்தை அவர் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரமான 8k தரத்துக்கு மாற்றப்படும் மணிரத்னத்தின் பழைய திரைப்படங்கள்!