Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் வந்த விஜய் ஸ்கூட்டியில் திரும்பி சென்றாரா?

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:03 IST)
நடிகர் விஜய் இன்று காலை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சைக்கிளில் வந்தது கவனத்தை ஈர்த்தது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். விஜய் நீலாங்கரையில்  உள்ள வாக்குச்சாவடிக்கு  வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பரப்பி வருகின்றனர். 

வாக்களித்த விஜய் மறுபடியும் சைக்கிளில் செல்லாமல் யாரோ ஒருவரின் ஸ்கூட்டியில் திரும்பி சென்றாராம். ரசிகர்கள் அவரை தொடர்ந்து சாலைகளில் செல்வதாலும், இதனால் தேவையில்லாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அவர் அவ்வாறு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments