Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது 'சிங்கப்பெண்ணே' பாடல்: விஜய் ரசிகர்கள் குஷி

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (22:37 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படத்தின் 'சிங்கப்பெண்ணே'  பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியானது
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான், சாஷா திரிபாதி பாடிய இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே அட்டகாசமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
 
பெண் என்றால் இதுவரை மென்மையானவற்றுடன் ஒப்பிட்டு வந்த நிலையில் பெண்களாலும் கடுமையான பணிகளை செய்திட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெண்ணை சிங்கத்துடன் ஒப்பிட்டு ''சிங்கப்பெண்ணே' என்ற வார்த்தையில் இந்த பாடல் தொடங்குகிறது.
 
இந்த பாடலின் லிரிக் வீடியோவில் விஜய், நயன்தாரா உள்பட நட்சத்திரங்களின் ஸ்டில்களும், ஏ.ஆர்.ரஹ்மான் அழகாக பாடும் ஸ்டைலும் இடம்பெற்றுள்ளது.
 
இந்த பாடல் வெளியான ஒருசில நிமிடங்களில் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் டிரெண்டுக்கு வந்துவிட்டது என்பதை சொல்லவே தேவையில்லை.

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments