Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் கோட் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்!

vinoth
செவ்வாய், 23 ஜூலை 2024 (17:23 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் இறுதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜூலை இறுதியில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments