Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிஞ்சா இந்த போஸ்டரை கிண்டலடிங்க ; தமிழ்படம் இயக்குனருடன் விஜய் ரசிகர்கள் மோதல்

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (12:41 IST)
சர்கார் பட விஜய் போஸ்டரை தமிழ் படம் குழுவினர் கிண்டலடித்த விவகாரம் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

 
தமிழ் சினிமாவை கிண்டலடித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கி வெளியாகிவுள்ள தமிழ்படம் 2 தொடர்பான போஸ்டர் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நடிகர் விஜய் வரை ஒருத்தரையும் விடமால் இப்படத்தில் கிண்டலடித்துள்ளனர்.
 
ஏற்கனவே துப்பாக்கி, மெர்சல் படங்களில் இடம் பெற்ற காட்சிகளை போல் இப்படத்தில் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  இந்நிலையில், சர்கார் படமும் இதிலிருந்து தப்பவில்லை. அந்த படத்தில் காரில் அமர்ந்து விஜய் லேப்டாப்பை பார்ப்பது போல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
 
தமிழ்படம் 2-வில் ரிக்‌ஷாவில் அமர்ந்து கொண்டு நடிகர் சிவா லேப்டாப்பை பார்ப்பது போல் கிண்டலாக காட்சி அமைத்துள்ளனர். இதைக்கண்ட விஜய் ரசிகர்கள், உங்களுக்கு தைரியம் இருந்தால், விஜய் புகைப்பிடிப்பது போல் உள்ள காட்சியை ஸ்பூவ் பன்ணுங்க பார்ப்போம் என டிவிட்டரில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்ன சுதா கொங்கரா!

மாஸா? தமாஸா?.... மைக் மோகனின் ஹரா டிரைலர் எப்படி?

வாடிவாசல் படத்தை வெற்றிமாறனுக்கு முன்பே சூர்யாவை வைத்து இயக்க ஆசைப்பட்ட பிரபல இயக்குனர்…!

ஜூலை இறுதியில் விக்ரம்மின் தங்கலான் ரிலீஸ்… படக்குழு எடுத்த முடிவு!

"நாட்டாமை" திரைப்படத்தில் இடம் பெற்ற மிச்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது - இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments