Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் போஸ்டர் சர்ச்சை – கறிக்கடைக்காரர்களை சமாதானம் செய்த விஜய் ரசிகர்கள் !

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (13:30 IST)
பிகில் போஸ்டரில் கறிவெட்டும் மரக்கட்டையின் மீது செருப்புக் காலை விஜய் வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறிவெட்டும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியான போது அது உருவாக்கப்பட்டிருந்த விதத்துக்காக கறிவெட்டும் தொழிலாளர்கள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. அந்த போஸ்டரில் இறைச்சி வெட்டுபவர் தோற்றத்தில் இருக்கும் ஒரு விஜய் இறைச்சியை வெட்டும் மரக்கட்டையின் மேல் தனது செருப்புக்காலை வைத்திருப்பது போல அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கோயம்புத்தூர் கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சார்பில் ‘இறைச்சி வியாபாரிகள் கறி வெட்டும் கட்டையைத் தொட்டு வணங்கிவிட்டுதான்  வேலையைத் தொடங்குவோம். அப்படிப்பட்ட கட்டை மீது செருப்புக்காலை வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளையும் அவமரியாதை செய்துவிட்டார்கள்.’ எனக் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளை விஜய் ரசிகர்கள் வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘ தளபதி விஜய் இறைச்சி வியாபாரிகளை அவமதிக்கும் வகையில் எப்போதும் நடந்து கொள்ள மாட்டார். படம் பார்த்தால் உங்களுக்கே இது புரியும்’ எனக் கூறியதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments