Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் இயக்குனர்களிடம் கதைகேட்டு வருகிறேன்… நேரடி தமிழ்ப்படம் பற்றி விஜய் தேவரகொண்டா தகவல்!

vinoth
சனி, 30 மார்ச் 2024 (14:27 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தமிழ்நாட்டில் இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்றது. இதையடுத்து இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா பேசியபோது அவரிடம் நேரடி தமிழ்ப்படத்தில் நடிப்பது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஜய் , “நான் சில தமிழ் இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருகிறேன். அவர்கள் பெயரை இப்போது சொல்ல முடியாது. என் வயதுக்கேற்ற ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். விரைவில் என் தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பு வரும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹாட் & க்யூட் லுக்கில் திவ்யபாரதி… லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

வேள்பாரி படத்துக்கான நடிகர்களை இப்படிதான் தேர்வு செய்யப் போறேன்… இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments