Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ் ஆக்‌ஷன் ப்ளஸ் அடக்கி வாசிக்கும் குடும்பஸ்தன்… விஜய் தேவரகொண்டாவின் பேமிலி ஸ்டார் டீசர்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (07:17 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தமிழ்நாட்டில் இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்றது. இதையடுத்து இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளும், விஜய் தேவரகொண்டா தன்னுடைய குடும்பத்துக்கு அடங்கி செல்பவராகவும் இரு வேறு பரிணாமத்தில் காணப்படுகிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments