Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாய்த்த நெட்டிசன்கள் - சரண்டர் ஆன நயன்தாரா காதலர்

Webdunia
திங்கள், 29 மே 2017 (12:17 IST)
இயக்குனரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ்சிவன் தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கு வருகிறார். 


 

 
ஆனால், படப்பிடிப்பு தொடங்கி பல நாட்கள் ஆகியும், இப்படத்தை பற்றிய எந்த தகவலோ அல்லது புகைப்படமோ வெளியே கசியவில்லை. எனவே, சூர்யாவின் ரசிகர்கள் பல நாட்களாக, ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் அல்லது படத்தின் டீசர் வீடியோவை வெளியிடுங்கள் என கேட்டு வந்தனர். ஆனால், அதை விக்னேஷ் சிவன் கண்டுகொள்ளவில்லை. 
 
அந்நிலையில், பாகுபலி2 படத்தை பற்றிய ஒரு பாராட்டு பத்திரமே வாசித்து ஒரு பெரிய டிவிட் போட்டிருந்தார் விக்னேஷ் சிவன் அதைத் தொடர்ந்து, இதற்கெல்லாம் நேரமிருக்கு.. ஆனால், படத்தை பற்றி பேச நேரமில்லையா என சூர்யா ரசிகர்கள் ஏகத்துக்கும் கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.


 

 
இந்நிலையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நடிக்கும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். மீம்ஸ் போதும் என கூறி கண்ணீர் வடிப்பது போலவும், கையெடுத்து கும்பிடுவது போலவும் இரு ஸ்மைலிகளை போட்டு கூறியுள்ளார்.

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments