Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியா நல்ல சேதி வந்துடுச்சி... விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாரா?

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (16:57 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருந்துகொண்டு ஊர் சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்தது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை முடித்த பிறகு கொரோனா ஊரடங்கில் முழுமையாக தளர்வு ஏற்பட்டதும் இருவரும் திருமணம் செய்துள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. அதுவும் ரொம்ப சிம்பிளா கோவிலில் வைத்து திருமணம் செய்ய போகிறார்களாம். எது எப்படியோ கல்யாணம் நடந்தா சரி என ரசிகர்கள் நயன் - விக்கி ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இருந்தாலும் இது உறுதி செய்யப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments