Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (07:43 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

முதல் பாகத்தில் இல்லாத மஞ்சு வாரியர், கென் கருணாஸ் எல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துவிட்டனவாம். கடைசி கட்டமாக 10 நாட்கள் ஷூட்டிங் பூந்தமல்லியில் நடக்க உள்ளதாம். அந்த காட்சிகளைப் படமாக்கிவிட்டால் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாகி விடும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments