‘மம்மூட்டி சார் நடிக்க இருந்த படம்… ஆனால்?’... அஞ்சாமை குறித்து விதார்த் பேட்டி!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (06:50 IST)
மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவந்த மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு விதமான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நீட் தேர்வுக்கு இன்னமும் எதிர்ப்புகள் உள்ளது. குறிப்பாக அதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வை முன்வைத்து அஞ்சாமை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை திருச்சித்திரம் நிறுவனம் தயாரிக்க, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை எஸ் பி சுப்பராமன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விதார்த், “இந்த படத்தின் கதையைக் கேட்கும்போதே நான் அழுதுவிட்டேன். இந்த படத்தில் நடிக்கும் போது சில பட வாய்ப்புகளை இழந்தேன். இந்த படத்தின் கதையைக் கேட்டு முதலில் மம்மூட்டி நடிப்பதாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிவிட அவருக்குப் பதில் ரஹ்மான் சார் நடித்துள்ளார்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments