Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் ரிலீஸ் ஆனது ‘விடாமுயற்சி’.. குவியும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்..!

Siva
வியாழன், 6 பிப்ரவரி 2025 (07:42 IST)
அஜித் நடித்த "விடாமுயற்சி" என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு வெளிநாடுகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், இந்தியாவில் உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று காலை 6:00 மணிக்கே திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 90% பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அஜித்தின் ஆக்சன் காட்சிகள், அஜித் - திரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள், அர்ஜுனனின் வில்லத்தனம், அனிருத்தின் பின்னணி இசை, மகிழ் திருமேனியின் விறுவிறுப்பான இயக்கம் என படம் முழுவதுமாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
 
இதனைத் தொடர்ந்து, இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
2024 ஆம் ஆண்டு "துணிவு" திரைப்படம் வெளியான நிலையில், இரண்டு வருடம் கழித்து அஜித் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து, அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
 
மொத்தத்தில், இந்த படம் அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments