Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடத்துக்கு செல்லும் வெற்றிமாறன்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (13:41 IST)
‘வடசென்னை’ படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக கன்னடப் படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.


 

 
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாகத் தயாராகும் இந்தப் படத்தை, வெற்றிமாறன் இயக்கி வருகிறார். தற்போது, முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது. ‘விஐபி 2’ படத்தின் புரமோஷனில் தனுஷ் பிஸியாக இருப்பதால், அவர் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 4 பையன்களை மையப்படுத்திய கதையை எழுதியுள்ளார் வெற்றிமாறன். இதில், கெட்ட போலீஸாக நடிக்கிறார் கிஷோர். அவரே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். ‘வடசென்னை’யில் பிஸியாக இருப்பதால் இதை வெற்றிமாறனே இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்கப் போகிறார்களா எனத் தெரியவில்லை.

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments