Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 & வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

vinoth
திங்கள், 13 மே 2024 (15:29 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விடுதலை 2 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “விடுதலை 2 ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் உள்ளது. அதை முடித்துவிட்டு விடுதலை 2 ரிலீஸானதும்,  வாடிவாசல் தொடங்கும். அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் மூன்று மாதங்கள் நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவை வைத்து படமெடுத்தால் எனக்கு ரூ.20 கோடி தர வேண்டும்: வெற்றிமாறனுக்கு தனுஷ் நிபந்தனை?

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments