Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் திரைப்பட விழாக்கள்… பின்னர்தான் தியேட்டர் ரிலீஸ்.. விடுதலை 2 படம் குறித்து வெற்றிமாறனின் திட்டம்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (07:47 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார். இந்நிலையில் இப்போது படத்தில் மேலும் சில கதாபாத்திரங்களை சேர்க்க முடிவு செய்துள்ளாராம். அதனால் ஷூட்டிங் இன்னும் 30 நாட்கள் அதிகமாக நடத்த வேண்டியுள்ளதாம்.

இந்நிலையில் விடுதலை 2 படம் முடிந்ததும் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைத்து ஒரே பாகமாக்கி திரைப்பட விழாக்களுக்கு அந்த படத்தை அனுப்ப இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments