Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு, ஆனா கொஞ்சம்…? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (09:24 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது விடுதலை 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டைக் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன. ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் “விடுதலை 2 ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு.. ஒரு பிளாஷ்பேக் காட்சி மட்டும் விஜய் சேதுபதிய வச்சு எடுக்க வேண்டியிருக்கு” எனக் கூறியுள்ளார். தற்போது மிஷ்கின் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி இடையில் விடுதலை 2 ஷுட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

வெற்றிமாறனை இயக்குனர் சிகரம் என வர்ணித்த வன்னி அரசு.. கே பாலசந்தர் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments