Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோட்’ படத்தின் புதிய போஸ்டரை திடீரென வெளியிட்ட வெங்கட்பிரபு.. இன்று என்ன ஸ்பெஷல்?

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (11:53 IST)
’கோட்’ படத்தின் அப்டேட் கொடுங்கள் என பல நாட்களாக விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று திடீரென ’கோட்’ படத்தின் புதிய போஸ்டரை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். 
 
விஜய் நடித்துவரும் ’கோட்’  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’கோட்’ படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான பிரபுதேவாவுக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பிரபுதேவாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வெங்கட் பிரபு ’கோட்’ படத்தில் அவர் நடித்த கேரக்டரின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டரில் விஜய் இல்லை என்றாலும் விஜய் ரசிகர்களும் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த போஸ்டர் தங்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றும் கூறி வருகின்றனர்.
 
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.  யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments