Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வீரமே வாகை சூடும்’ வியாபாரம் இத்தனை கோடியா?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:28 IST)
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சுப்பையா சண்முகம் என்பவர் பெற்றுள்ளதாகவும் இந்த படத்தை அவர் பத்தரை கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
மேலும் மற்ற மாநிலங்களில் ரிலீஸ் உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அதேபோல் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் வியாபாரமும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஜனவரி 26 ஆம் தேதி வேறு எந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments