Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரமே வாகை சூடும் ரிலீஸ்… இரண்டு மாதத்துக்கு வாய்ப்பில்லையாம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:33 IST)
விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸில் நிச்சயமற்ற சூழலே இப்போது நிலவி வருகிறதாம்.

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய வாரம் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’, பொங்கலுக்கு அஜீத்தின் வலிமை மற்றும் பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தற்போது பின்வாங்கி விட்டது என்றும் அதேபோல் ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. எனவே பொங்கலுக்கு இப்போதைக்கு வலிமை மட்டுமே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. எனவே ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இந்த விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பொங்கலுக்கு ரிலீஸாகாமல் ஜனவரி 26 ஆம் தேதியே வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஜனவரி 26 ஆம் தேதியும் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இப்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளோடு படத்தை ரிலிஸ் செய்வது ரிஸ்க் என்று படக்குழு நினைக்கிறதாம். ஏற்கனவே விஷாலின் சமீபத்தைய படங்கள் வசூலில் சோடை தட்டியதால் கட்டுபாடுகள் நீக்கப்பட்ட பின்னரே ரிலிஸ் செய்யலாம் என ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments