Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்த பிரபல நடிகர்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (18:25 IST)
அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்த பிரபல நடிகர்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!
அஜித் நடித்து வரும் ஏகே 61 என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக பிரபல நடிகர் வீரா தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
இந்த மனிதருடன் சில நாட்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும், நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். பலவருட ரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவையே அவரை மகத்தான நட்சத்திரமாக மாற்றியுள்ளது.
 
அன்புள்ள ஏகே சார், நாம் மீண்டும் சந்திக்காமல் போனால் தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கி உள்ளீர்கள். 
 
நான் பழகிய நாட்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் இயல்பில் இருக்க விட்டீர்கள். உங்களை சுற்றி உள்ள எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என நீங்கள் விரும்புவது போல் உங்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments