Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லியின் அடுத்த பாலிவுட் பிராஜக்ட்… டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (06:58 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லி மற்றும் இன்னொரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பேபி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மே 31 ஆம் தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments