Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுடச்சுட வெளியான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸில் வர்மா!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (14:12 IST)
நடிகர் விக்ரம் தனது மகனின் முதல் படத்தை இயக்குனர் பாலா இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 'அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக் படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். ஆனால் அந்த படம் முடிவடைந்தவுடன் போட்டுப் பார்த்த விக்ரம் அந்த படம் தனக்கு திருப்தி இல்லை என்றும், இந்த படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி தான் என்றும், தனது மகனின் முதல் படமே தோல்வி படமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உதவி இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படம் மீண்டும் உருவாக்கப்பட்டு அந்த படம் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி  இன்று முதல் ஓடிடியில் வெளியான இப்படத்தை விமர்சகர்கள் கழுவி ஊற்றிவிட்டனர். படம் வெளியான இன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments