Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு நடிகைகளுக்கு நடிகர்களின் ஆதரவு கிடைக்கிறது… தமிழ் சினிமா குறித்து வாணி போஜன் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2024 (07:41 IST)
சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.

சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் மகான் படத்தில் நடித்தார். ஆனால் அவரது கதாபாத்திரம் முழுவதும் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அஞ்சாமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ள அவர் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இடையே காட்டப்படும் பாரபட்சம் குறித்து பேசியுள்ளார். அதில் “திரைத்துறை பின்னணி கொண்ட வாரிசு நடிகைகளுக்கு அறிமுகம் பெரிதாக கிடைக்கிறது. அவர்களை ஆதரிக்க நான்கு நடிகர்கள் வருகிறார்கள். தங்களை பி ஆர் அணி வைத்து ப்ரமோட் செய்து கொள்கிறார்கள்.  நான் பொறாமையில் இதை சொல்லவில்லை. எனக்கு தெரிந்த நிறைய திறமையான நடிகைகளுக்கு இன்னமும் உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு உண்மை தெரியும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments