Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி அடுத்தடுத்து வலிமை அப்டேட் வருமாம்… அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (15:45 IST)
ரிலீஸை நெருங்கிக் கொண்டிருப்பதால் வலிமை படத்தின் அப்டேட்கள் இனிமேல் வெளியாகிக் கொண்டே இருக்குமாம்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வலிமை திரைப்படத்தின் இந்தி டப்பிங் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் வெளியாகும் அன்றே இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தீபாவளியை நோக்கி ரிலீஸ் வேலைகள் நடந்து வருவதால் இனிமேல் 15 நாட்களுக்கு ஒருமுறை படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்குமாம். இத்தனை நாள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments