Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகிறதா வலிமை டீசர்?? ரசிகர்கள் கொண்டாட்டம்! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (10:50 IST)
நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் உள்ள அஜித்குமார் நடித்த வலிமை படத்தின் டீசர் வியாழக்கிழமை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது. தற்போது படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் நாளை வலிமை டீசர் வெளியாகலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இதுகுறித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments