Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வலிமை படைத்த இமாலய சாதனை… போனி கபூர் வெளியிட்ட தகவல்!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (09:09 IST)
வலிமை திரைப்படம் ஓடிடியில் 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதை உறுதிப்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது ஓடிடியில் 4கே தரப்பில் டால்பி ஒலி வடிவமைப்பில் வலிமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.

முன்னதாக வலிமை திரைப்படம் வெளியாகி 48 மணிநேரத்தில் சுமார் 200 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகி சாதனைப் படைத்துள்ளதாக ஜி 5 சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் 500 மில்லியன் நிமிடங்கள் தாண்டி ஸ்ட்ரீம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓடிடியில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments