Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை ஃபர்ஸ்ட் லுக் தயார்… ஆனால் இப்போது ரிலீஸ் இல்லை – ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (10:48 IST)
வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல் லுக் பார்வை புத்தாண்டு அல்லது பொங்கலுக்காவது வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. படக்குழுவினர் அஜித் இருக்கும் போஸ்டரை தயார் செய்து வைத்திருந்தாலும் இப்போது வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து படப்பிடிப்பெல்லாம் முடிந்த பின்னர்தான் போஸ்டரை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments