Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வஜ்ரம் படக்குழுவினர் நடத்திய மாரத்தான் போட்டி

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (11:52 IST)
அனைவருக்கும் கல்வி, காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம், இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்...
இதுதான் வஜ்ரம் படத்தின் மையம். கல்வியின் முக்கியத்துவத்தை சொல்வதால் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேற்று சென்னை அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம்வரை மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 
 
வஜ்ரம் படக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த மினி மாரத்தானில் ஏராளமான பள்ளி சிறுவர்கள் கலந்து கொண்டனர். காலை 8.30 மணிக்கு மாரத்தான் தொடங்கியது. 
 
படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் பி.ராமு ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் தாணு, கே.ராஜன், நடிகர்கள் தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
பசங்க, கோலிசோடா படங்களுக்குப் பிறகு ஸ்ரீராம், கிஷோர், குட்டிமணி, பாண்டி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

Show comments