Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக: வைரமுத்து வாழ்த்து..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:20 IST)
பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான ‘முதல் மரியாதை’  திரைப்படத்தில் அந்த நிலாவத்தான் நாம கையில பிடிச்சோம்’ என்ற பாடலை கவியரசு வைரமுத்து எழுதினார். 
 
இப்போது அதை வார்த்தைகளை பயன்படுத்தி சந்தராயன் 3 வெற்றி பெற காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். 
 
இஸ்ரோவின் சந்திராயன் திரையை வெற்றி காரணமாக நாடே கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வைரமுத்து கவிதை வடிவில் தெரிவித்த வாழ்த்து கவிதை இதோ
 
பூமிக்கும் நிலவுக்கும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
இந்தியா
 
ரஷ்யா அமெரிக்கா சீனா 
என்ற வரிசையில்
இனி இந்தியாவை எழுதாமல்
கடக்க முடியாது
 
இஸ்ரோ விஞ்ஞானிகளின்
கைகளைத் தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்
 
இது மானுட வெற்றி
 
அந்த நிலாவத்தான்
நாம கையில புடிச்சோம்
இந்த லோகத்துக்காக 
 
இது போதாது
நிலா வெறும் துணைக்கோள்
நாம் வெற்றி பெற - ஒரு
விண்ணுலகமே இருக்கிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments