அந்த இயக்குனரால்தான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன்… யாரை சொல்கிறார் வடிவேலு?

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:55 IST)
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வடிவேலு கொடுத்த நேர்காணல்களில் இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோரை தரக்குறைவாகப் பேசி வந்தார். அதன் பின்னர் வடிவேலு தற்போது படங்களில் நடித்து வருகிறார். மாமன்னன் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஆனால் நகைச்சுவையில் இன்னும் அவரால் கம்பேக் கொடுக்கமுடியவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் சர்ச்சையான விஷயம் ஒன்றைக் கூறியுள்ளார். அதில் “ஒரு இயக்குனர் கிட்ட எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. அவர் கொடுத்த காட்சிகளை நான் இம்ப்ரூவ் பண்ணி சொன்னேன். சிரித்துக் கொண்டேக் கேட்டவர் ஒரு கட்டத்தில் பேப்பரில் என்ன இருக்கோ அதை மட்டும் பண்ணுங்க என்றார்.

அந்த பெரிய இயக்குனருக்கும் எனக்கும்தான் பிரச்சன நடந்துச்சு. அவரால்தான் நான் இரண்டு மூன்று ஆண்டுகள் நடிக்காமல் இருந்தேன். அந்த இயக்குனர் பெயரை சொல்ல விரும்பல. யாரென்று உங்களுக்கே புரிந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

பூஜை போட்ட ஒருசில நாட்களில் சூர்யா படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி?

'ஹார்ட் பீட்' தொடரில் நடித்த நடிகருக்கு திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து..!

'ஹார்ட் பீட் 3' வெப்தொடரின் ஒளிபரப்பு எப்போது? வீடியோ வெளியிட்ட ஹாட்ஸ்டார்..!

ஒத்திவைக்கப்பட்ட ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பாலையா ரசிகர்கள் குஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments