Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த வடிவேலு கைது!

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (18:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலின் வீட்டில் அடுத்தது பல சோகமான சம்பவங்கள் நடந்து வருகிறது. 


 
சமீபகாலமாக நடிகர் விஷால் கப்பட்ட பிரச்சனைகளில் தலையிட்டு சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். அதில் முக்கியமானது நடிகர் சங்கத்தேர்தல். பதவிக்காலம் முடிவடைந்தும் நடிகர் சங்கம் கட்டப்படாமல் தள்ளிப்போனதால் அவரின் மீது பல அதிருப்திகள் எழுந்ததுள்ளது. இதனால் அவருடன் இருந்தவர்கள் பலர் பாக்யராஜ் அணிக்கு சென்றுவிட்டனர்.
 
மிகுந்த எதிர்பார்ப்பிகளுக்கிடையில் சமீபத்தில் தான் நடிகர் சங்கத்தேர்தல் முடிவடைந்தது. இதன் முடிவிவுகள் வருகிற ஜூலை 8 ம் தேதி வெளியிடவுள்ளனர். இதில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதே போட்டியாளர்களின் மிகப்பெரிய ப்ரெஷராக இருந்துவரும் நிலையில் தற்போது விஷால் வீட்டில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 
 
விஷாலின் தந்தை  ஜி.கே. ரெட்டியிடம் ரூ 86 லட்சம் மோசடி செய்ததாக கல்குவாரி அதிபர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விஷாலின் தந்தை அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, "மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலு (வயது 56) என்பவர் தனது குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி தருவதாக என்னிடமிருந்து ரூ.86 லட்சம் வாங்கினார். 
 
ஆனால் பணத்தை வாங்கிவிட்டு கருங்கல் ஜல்லி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். எனவே  இதுதொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொழிலதிபர்  வடிவேலுவை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

இன்னும் 50 நாட்கள்… ரிலீஸ் குறித்த அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Waiting இயக்குனரே… கருப்பு படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றிய சூர்யாவின் பதிவு!

அடுத்த கார் ரேஸ் பந்தயத்துக்குத் தயாரான அஜித் குமார்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments