Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் 100% இருக்கையை தவிர்க்கவும்: தமிழகத்திற்கு அமெரிக்க பேராசிரியர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:20 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு நேற்று அனுமதி அளித்து அரசாணை வெளியானது என்பது தெரிந்ததே. இந்த அரசாணை காரணமாக வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் திறப்பு குறித்து அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக தொற்று நோய்கள் துறை தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் சினிமா தியேட்டர்கள் குறைவான காற்றோட்டத்துடன், அதிக நெரிசல் இருக்கும் என்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுமையான கட்டுப்பாடு இல்லாமல் தியேட்டர்களை தொடங்குவதை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது என்றும் இதனை தவிர்க்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
ஏற்கனவே 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு திரையுலகினரே ஒரு சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ள நிலையில் போது அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஒருவரும் இதே கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments