Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஹிட்டான ‘பாகுபலி-2’

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (15:39 IST)
கடந்த வாரம் வெளியான ‘பாகுபலி-2’, அமெரிக்காவிலும் நன்றாக ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது.

 
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில்  கடந்த வாரம் வெளியானது ‘பாகுபலி-2’. இந்தியாவில் 6000 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 2000 தியேட்டர்கள் என, உலகம்  முழுவதும் 8000 தியேட்டர்களில் வெளியானது இந்தப் படம். முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த  இந்தப் படம், 6 நாட்கள் முடிவில் 770 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 
 
விரைவில் 1000 கோடியைத் தொட்டுவிடும் சாத்தியக் கூறுகள் அனைத்தும் இந்தப் படத்திற்கு இருக்கின்றன. இந்நிலையில்,  அமெரிக்காவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில், அதிக வசூல் செய்த படங்களில் மூன்றாம் இடம்பிடித்திருக்கிறது ‘பாகுபலி-2’. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் மொத்த வசூல் 700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

’அஞ்சாமை’ இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு!

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

இன்ஸ்டாவில் வைரல் ஆகும் மாளவிகா மோகனனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

மிருனாள் தாக்கூரின் ஹாட் & க்யூட் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் போஸ் கொடுத்து மயக்கும் யாஷிகா ஆனந்த்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments