Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணி சார் செய்த மாயம்! இளம் கமல்ஹாசனின் தரிசனம்! - மாஸ் காட்டும் தக் லைஃப் Release Date Teaser!

Prasanth Karthick
வியாழன், 7 நவம்பர் 2024 (11:36 IST)

கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி டீசருடன் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவின் பன்முக அடையாளமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கமல்ஹாசன் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை டீசருடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

 

கமல்ஹாசன் - மணிரத்னம் - ஏ ஆர் ரஹ்மான் காம்பினேஷனில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் ரிலீஸ் டீசரே எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக உள்ளது. கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் ஆக்‌ஷன் காட்சிகளும், ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவும் மிரள வைக்கின்றன.
 

ALSO READ: மைக்கேல் ஜாக்சன் பயோபிக் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!
 

இந்த டீசரின் ஒரு காட்சியில் கமல்ஹாசன் குருதிப்புனல் படத்தில் வருவது போல மிகவும் இளமையாக கூலிங் க்ளாஸ் அணிந்து வரும் ஷாட் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் இளமையான கமல்ஹாசனின் காட்சிகள் சில படத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ஜூன் 5, 2025ம் ஆண்டு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments