Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி.. விஷால் நன்றி

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (15:27 IST)
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக கட்டப்படாமல் இருக்கும் நிலையில் அமைச்சர் மீது உதயநிதி இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக ரூபாய் ஒரு கோடி நிதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் பிரமாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்தது. தியாகராய நகர் அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மீண்டும் இந்த கட்டிடத்தை கட்ட நிதி திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் இதை கேள்விப்பட்ட அமைச்சர் உதயநிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளார். 
 
நாசர், விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த பணத்தை அமைச்சர் உதயநிதி கொடுத்த நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments