Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் பைரவா

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் பைரவா

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (18:16 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.


 
 
மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், விஜய் ராகவன், ‘மைம்’ கோபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தின் சைக்கிள் ரிக்ஷாவில் கோட் அணிந்து நின்றபடியும், அமர்ந்தபடியும் விஜய் இருக்கும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பஞ்ச் டயலாக் இருக்கக்கூடாது என்று இயக்குனரிடம் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
 
இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய் கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளாதாகவும், அதனை விரைவில் ஒலிப்பதிவு செய்யவுள்ளனர்.

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments