Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் அரசியல் குறித்து த்ரிஷா கூறியது என்ன தெரியுமா?

Webdunia
திங்கள், 29 மே 2017 (06:20 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனேகமாக ஜூலை மாதம் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு திரையுலகினர் பெரும் ஆதரவை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


பல திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நேற்று த்ரிஷாவிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த த்ரிஷா, 'ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை' என்று கூறி ஒதுங்கி கொண்டார்.

அதேபோல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும்' என்ற படத்தில் நடித்த பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்ரதா ரஜினியின் அரசியல் குறித்து கூறியபோது, ' ரஜினிகாந்த் உயர்ந்த நிலையில் இருந்தாலும் எளிமையாக இருப்பவர். அவரால் அரசியலிலும் வெற்றி பெற முடியும். ஆனால், நடிகர் சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கிவிட்டு பின்வாங்கியது போல ஆகிவிடக்கூடாது' என்று கூறியுள்ளார்.

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன்: கூல் சுரேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments